Published : 30 Dec 2021 07:35 AM
Last Updated : 30 Dec 2021 07:35 AM

ஏபிவிபி உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்த்தப்படும்: தேசிய செயலர் முத்துராமலிங்கம் தகவல்

சென்னை

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி)அமைப்பின் தேசியசெயலர் எல்.முத்துராமலிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

ஏபிவிபி அமைப்பில் 32 லட்சம்மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அமைப்பின் 67-வதுதேசிய மாநாடு மத்தியப் பிரதேசமாநிலம் ஜபல்பூரில் நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பது, இந்திய பாரம்பரியக் கல்வி முறையில் உள்ள யோகா, பகவத்கீதையை பாடத் திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளுக்கு 8 மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கும், பெண்களின் திருமண வயதை 18-லிருந்து21-ஆக உயர்த்தும் முடிவுக்கும்,சிலம்பத்தை தேசிய விளையாட்டாக அறிவித்தமைக்கும் மாநாட்டில் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது. ஏபிவிபி தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு 75 ஆண்டுகளாகிறது. இதையொட்டி, உறுப்பினர் சேர்க்கையை 1 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், வரும் ஜனவரி 26-ம்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, ஏபிவிபி அனைத்து கிளைகளிலும் `திரிரங்கா' யாத்திரை நடத்தப்படும். சுதந்திரப்போராட்டத்தில் மறைக்கப்பட்ட வீரர்கள் குறித்த புத்தகங்களைவெளியிடவும் தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x