Last Updated : 27 Dec, 2021 02:45 PM

 

Published : 27 Dec 2021 02:45 PM
Last Updated : 27 Dec 2021 02:45 PM

காரைக்காலில் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு

காரைக்காலில் வணிக நிறுவனம் ஒன்றில் ஆய்வு செய்து, ஊழியர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்த புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் சி.உதயகுமார்.

 காரைக்கால்

புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் சி.உதயகுமார் இன்று (டிச.27) காரைக்காலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஒமைக்ரான் பரவல் சூழல் உள்ளிட்டவை குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுடன் சுகாதாரத்துறைச் செயலர் சி.உதயகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து காரைக்காலில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், வங்கிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனரா என்று கேட்டறிந்தார்.

அப்போது, ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் நகல்களை, நிறுவன உரிமையாளர்கள் வாங்கி வைக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதோரைக் கடையில் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், மீறும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறைச் செயலர் சி.உதயகுமார் தெரிவித்தார்.

வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாமல் பணியாற்றியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு அந்த இடத்திலேயே தடுப்பூசி போடப்பட்டது.

நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவராஜ்குமார், காரைக்கால் நகராட்சி ஆணையர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x