Published : 13 Mar 2016 09:22 AM
Last Updated : 13 Mar 2016 09:22 AM

தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் வாங்கிய அரியலூர் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை: கடன் தவணை வசூலில் கெடுபிடி என குற்றச்சாட்டு

அரியலூர் அருகே இளைஞர் ஒருவர் விஷம் குடிதது தற்கொலை செய்துகொண்டார். தனியார் நிதி நிறுவனத்தினர் டிராக்டருக்கான கடன் தவணை வசூலில் வரம்பு மீறி நடந்துகொண்டதே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அழகர்(26). பெரம் பலூரில் செயல்படும் சோழமண்ட லம் ஃபைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்திடம் கடனுதவி பெற்று அழகர் டிராக்டர் ஒன்றை வாங்கி இருந்தார்.

சுமார் ரூ.5 லட்சம் வரை கடன் தவணைகளை செலுத்தியிருந்த நிலையில், கடந்த ஒரு சில தவ ணைகளை அவர் கட்டவில்லை யாம். இந்நிலையில் மார்ச் 10-ம் தேதி நிதி நிறுவனத்தின் பெயரை கூறிக்கொண்டு சிலர், வி.கைகாட் டியில் பொது இடத்தில் அழகரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து அவர்கள், டிராக்டரின் பின்பக்க பெட்டியை அங்கேயே விட்டு விட்டு டிராக்டரை ஓட்டிச் சென்றுவிட்டனராம்.

அன்று மாலை வி.கைகாட்டியில் விஷமருந்தி மயங்கிக்கிடந்த அழ கரை உறவினர்கள் மீட்டு கீழப் பழூர் மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை அழகர் இறந்தார்.

இந்நிலையில், வி.கைகாட்டி யைச் சேர்ந்த சில இளைஞர்கள் இந்த தகவலை ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சிக்காக அவ்வழியே வந்த திமுக மாவட்டச் செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ-வுமான எஸ்.எஸ்.சிவசங்கர், அழகர் குடும் பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் ‘தி இந்து’விடம் கூறியபோது, “குடும்பத்தில் ஆளில்லாதபோது தாறுமாறாகப் பேசியதும், சம்பவத்தன்று சுமார் 10 பேர் பொது இடத்தில் வைத்து அவரை மிரட்டியதும், அதில் சிலர் தங்களை சீருடையற்ற போலீஸார் என்றும் கூறி அப்பாவி இளைஞரை பயமுறுத்தி இருக்கின்றனர்.

அருகில்தான் காவல் நிலையம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே போலீஸார் தலையிட்டிருந்தால் இத்தனை விபரீதம் நடந்திருக்காது. அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்ததாலேயே ஒரு இளை ஞர் தற்கொலைக்கு தூண்டப்பட் டிருக்கிறார். உடனடியாக தீவிர விசாரணை நடத்துவதுடன் இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க தொடர் நடவடிக்கைகள் அவசியம்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இது போன்ற கடன் தவணை வசூ லில் காட்டிய கெடுபிடியால் விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரி யலூர் மாவட்டத்தில் டிராக்டர் கடன் பிரச்சினையில் இளைஞர் தற்கொலை செய்துகொண் டுள்ளது பரபரப்பாகப் பேசப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x