Published : 04 Mar 2016 01:24 PM
Last Updated : 04 Mar 2016 01:24 PM

அரசாணைகளை இணையத்தில் பதிவேற்றக் கோரி வழக்கு

தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை உடனுக்குடன் அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய மனு தொடர்பாக அச்சகத் துறையிடம் தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக பொதுநலன் வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், சுற்றறி க்கைகள், விதிகள் சில ஆண்டுகளாக அரசின் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப் படுவதில்லை. அதே நேரத்தில் மத்திய அரசு பிறப்பிக்கப்படும் அனைத்து அரசாணைகள், அறிவிப் பாணைகள், சுற்றறிக் கைகள், விதிகள், அரசிதழ் அறிவிப்புகள் உடனுக்குடன் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் தமிழக அரசின் இணையதளத்தில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், விதிகள் பதிவேற்றம் செய்யப் படாமல் திட்டமிட்டு ரகசியமாக வைக்கப்படுகின்றன.

இதனால் அரசின் உத்தரவு நகல் கிடைக் காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் சம்பந் தப்பட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் பொதுமக்களை ஏமாற்றி அலைக்கழிக்கும் நிலை ஏற்படுகிறது.

தற்போது அனைத்து பணிகளு க்கும் அரசின் உத் தரவு நகல்கள் ஒவ்வொரு இந்திய முடிமக ன்களுக்கும் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் விரைவில் நிவாரணம் பெறும் வகையில், தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அரசின் முக்கிய அறிவிப்பாணைகள், சுற்றறிக் கைகளை தாமதம் செய்யாமல் அரசின் இணையதளத்தில் பதிவே ற்றம் செய்வது அரசின் கடமை.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு 17.2.2016ம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், சுற்றிக்கை களை அரசின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது அரசாணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அரசு அச்சகத் துறையிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x