Published : 20 Mar 2016 10:00 AM
Last Updated : 20 Mar 2016 10:00 AM
சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத் தால் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ. 21 ஆயிரத்து 992-க்கு விற்கப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கம் விலை மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வரு கிறது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் நேற்று சிறிய அளவில் குறைந்திருந் தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.21 ஆயிரத்து 992-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 749-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 757-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT