Published : 14 Mar 2016 08:39 AM
Last Updated : 14 Mar 2016 08:39 AM

அதிமுகவில் கூட்டணி பேச்சு தொடங்கியது: ஜெயலலிதாவுடன் 7 கட்சி தலைவர்கள் சந்திப்பு

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுட னான பேச்சுவார்த்தை நேற்று அதி காரப்பூர்வமாக தொடங்கியது. முதல்கட்டமாக 7 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜெயலலி தாவை சந்தித்துப் பேசினர்.

சட்டப்பேரவை தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுகவின் நிலை தெரியாமல் இருந்தது. அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி யிடுமா, தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், 7 கட்சிகளின் தலை வர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசியதன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில செயலாளர் பி.வி. கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. முதல்வரை சந்தித்துவிட்டு வந்த தலைவர்கள் கூறியதாவது:

எஸ்.எம்.பாக்கர்:

அதிமுகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக செயற் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம். நாங்கள் சீட்டும், நோட்டும் வாங்க மாட்டோம்.

செ.கு தமிழரசன்:

அதிமுகவுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். கூட்டணி தொடர்பான விஷயங்கள் தொடரும்.

ஜி.தேவராஜன்:

எங்கள் கட் சிக்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். கட்சியினருடன் பேசி முடிவெடுப்ப தாக முதல்வர் கூறியுள்ளார்.

தனியரசு:

தொகுதி தொடர்பாக முதல்வர்தான் அறிவிப்பார். நாங் கள் ஆதரவை பதிவு செய்தோம். சீட் கொடுக்காவிட்டாலும் ஆதரவு அளிப்போம்.

வேல்முருகன்:

எங்கள் கட்சி வலு வாக உள்ள முக்கிய தொகுதிகள் தொடர்பான பட்டியலை முதல் வரிடம் அளித்துள்ளோம். கேட்ட இடங்களை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவர்களைத் தொடர்ந்து வணி கர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அவர் கூறும் போது, ‘‘வணிகர்கள் சங்கம் என்ப தால் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. எங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் அளித்துள்ளோம்’’ என்றார்.

ஆதரவு தெரிவித்த கட்சிகளிடம் அதற்கான கடிதங்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அவர்களிடம் தனித்தனியாக 10 நிமிடங்கள் பேசியதாக கூறப்படு கிறது. மேலும் சில கட்சிகள் கூட்டணி யில் சேரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்தக் கட்சிகளுடன் பேசி, விரைவில் கூட்டணி முடிவு கள் வெளியிடப்படும் என தெரிகிறது.

தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என தெரிகிறது. இந்தக் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x