Last Updated : 25 Mar, 2016 03:11 PM

 

Published : 25 Mar 2016 03:11 PM
Last Updated : 25 Mar 2016 03:11 PM

ராதாபுரம், நாங்குநேரி, பாளை., ஆலங்குளம், தென்காசி: 5 தொகுதிகளில் களமிறங்க தேமுதிக திட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், நாங்குநேரி, பாளைய ங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி ஆகிய 5 தொகுதிகளில் தேமுதிக களமிறங்க திட்டமிட்டுள் ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 124 தொகுதிகளில் தேமுதிகவும், 110 இடங்களில் மக்கள் நலக்கூட் டணியும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. தேமுதிக போட்டியிடும் 124 தொகுதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் 5 தொகுதிகள் நிச்சயம் இடம்பெறும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம் பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள ராதாபுரம் தொகுதியில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்த லில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தனது கட்சி வேட்பாளராக எஸ்.மைக்கேல்ராயப்பனை நிறுத்தியது. அத் தேர்தலில் மைக்கேல்ராயப்பன் வெற்றி பெற்றிருந்தார். இதுவரை இத்தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளைவிட மிக அதிமாக 67,072 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார்.

தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருக்கும் தேமுதிக இம்முறை ராதாபுரம் தொகுதியை தன்வசம் வைத்திருக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொகுதி வேட்பாளராக மகாராஷ்டிர மாநில தேமுதிக தலைவராக இருக்கும் சிவன ணைந்தபெருமாள் களமிறக்கப் படலாம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருநெல் வேலி தொகுதி தேமுதிக வேட்பா ளராக ஏற்கெனவே அவர் போட்டியிட்டிருந்தார். அத் தேர்தலில் அவர் 1,27,370 வாக்கு கள் பெற்று 3-வது இடத்தை பிடித்திருந்தார். அவருக்கு மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிட கட்சி தலைமை வாய்ப்பளிக்க உள்ளது.

மேலும் 4 தொகுதி

இதேபோல் நாங்குநேரி தொகுதி யில் தேமுதிக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன், பாளையங்கோட்டை தொகுதியில் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி, ஆலங்குளம் தொகுதியில் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் ஐயம் பெருமாள் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. தென்காசி தொகுதியில் போட்டியிட கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ராஜேந்திரநாத், இன்ப ராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த அனைவரும் ஏற்கெனவே கட்சித் தலைவர் விஜயகாந்தை நேர்காணலில் சந்தித்து திரும்பி யுள்ளனர். கூட்டணி தொடர்பாக முடிவு ஏற்படாததால், பலர் குழப்பத்துடன் இருந்தனர்.

தற்போது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந் திருப்பதால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக விருப்ப மனு அளித்த பலர் கருதுகின்றனர். தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.

தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருக்கும் தேமுதிக இம்முறை ராதாபுரம் தொகுதியை தன்வசம் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x