Published : 09 Nov 2021 08:27 AM
Last Updated : 09 Nov 2021 08:27 AM

10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: 10, 11-ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மதுரை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

10, 11-ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு:

வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11-ம் தேதி அதிகாலை வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (10, 11-ம் தேதிகளில்) கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய அதிகனமழை கொட்டித் தீர்த்தது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின் றன. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. பிரதான ஏரிகள் நிரம்பி வருவதால் உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால், நீர்வழித் தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதன் காரணமாக தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, வரும் 11-ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x