Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதல்வரை சந்திக்க முடிவு

காங்கயம் தாலுகாவில் மட்டும்40 உயர் மின்கோபுரங்கள் நிறுவப் படஉள்ளன.இத்திட்டப் பணிகளுக்காக ஏற்கெனவே விவசாயிகளிடம்இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கான வாடகை அளிப்பது, இனிவரும் திட்டப்பணிகளை சாலையோரம் புதைவடமாக செயல்படுத்துவது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல், காங்கயம் அடுத்த காடையூர் பகுதியில் உயர்மின் கோபுர திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியை விவசாயிகள் மூடினர். இந்நிலையில், உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்காங்கயத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் முத்துவிஸ்வநாதன், கொள்கை பரப்புச் செயலாளர் சிவகுமார், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் ஆட்சேபனையை மீறி அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டிய இழப்பீடு,போராடிய விவசாயிகளுக்கு அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழப்பீடு, 100 சதவீத கருணைத் தொகை, வாடகை, திட்டப் பாதையில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு, திட்டப் பாதையில் உள்ள கட்டிடங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் 11-ம்தேதி காலை 10 மணிக்கு நேரில் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்மற்றும் அனைத்து விவசாயிகளும்தமிழக முதல்வரை சந்திக்க சென்னையில் திரள்வோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x