Published : 25 Mar 2016 09:00 AM
Last Updated : 25 Mar 2016 09:00 AM

திமுகவுக்கு மேலும் 58 அமைப்புகள் ஆதரவு

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சிறிய கட்சிகள், ஜாதி, மத, சமூக, கலாச்சார ரீதியான அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை சுமார் 150-க்கும் அதிகமான அமைப்புகளின் நிர்வாகிகள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று 58 அமைப் புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேவர் மக்கள் இயக்கம், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் நாவிதர் பேரவை, தமிழ்நாடு வன்னியர் பிள்ளை சங்கம் உள்ளிட்ட 58 அமைப்புகளின் நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x