Published : 21 Mar 2016 10:03 AM
Last Updated : 21 Mar 2016 10:03 AM

தகவல் பரிமாற்றம் மற்றும் சேவைகளை வழங்க ரயில்வே உட்பட 60 துறைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரோ முடிவு

ரயில்வே உட்பட 60 துறைகளுக்கு தேவையான தகவல்கள், சேவைகள், வரைபடங்களை அளிக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ரயில்வே துறையில் விபத்துகளை தடுக்கவும், பயணிகள் பல்வேறு சேவைகளைப் பெறவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு நிர்வாகத்தில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் ஆலோசனை

இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரி களுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக பேசப்பட்டது. வேளாண்மை, ரயில்வே, தபால்துறை, சுற்றுலா, சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, வானிலை உட் பட மொத்தம் 60 துறைகள் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் பாதைகள் பல்வேறு இயற்கை சீற்றங்கள் அல்லது சமூக விரோத செயல்களால் சேதமடைந்தால் அந்த விவரங்களை உடனுக்குடன் தெரிவிப்பதன் மூலம் ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடியும். ரயில் பாதைகளை இணையதளம் மூலம் துல்லியமாக பார்க்க உதவும் வகையில் ஜிஐஎஸ் மேப் (புவியியல் தகவல் வரைபடம்) வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.

செல்போன் மூலம் தகவல்

மேலும், செல்போன் மூலம் ரயில்கள் புறப்பாடு, வந்தடைவது, நேரம் மாற்றியமைப்பு, டிக்கெட் முன்பதிவு, விரைவு ரயில்களில் வைஃபை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவையும் பயணிகள் பெற முடியும்.

இதேபோல, வேளாண்மைத் துறை, தபால்துறை, நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத்துறை, வனத் துறை, வானிலை உட்பட 60 துறை களுக்கு தகவல்கள் மற்றும் சேவை களை அளிக்க முடிவு செய்துள் ளோம்.

இது தொடர்பாக சம்பந்தப் பட்ட துறைகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகி றோம். குறிப்பாக பயிர் செய்யும் நிலம், காலியாக உள்ள நிலம், நீர்வளத்தை எவ்வாறு மேம்படுத்து வது? அதற்கான பாதைகளை எவ் வாறு அமைப்பது என்பன தொடர் பாக தகவல் அளிக்க முடியும்.

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திடீரென ஏற்படும் விபத்துகள், ஆபத்தான பகுதிகள் குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க முடியும்

புதிய சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டு மேம் படுத்துதல், வானிலை தொடர் பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் மற்றும் மீனவர்களை பாது காக்க முடியும். பொதுமக்களும் செல்போன் மூலம் நேரடியாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x