Published : 14 Mar 2016 09:53 AM
Last Updated : 14 Mar 2016 09:53 AM

வாகன சோதனையில் நிற்காமல் சென்ற கார் மோதி 2 எஸ்.ஐ.க்கள் உட்பட 4 பேர் காயம்

திருவள்ளூர் மாவட்டம் புழல் பஸ் நிலையம் அருகே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு புழல் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செங்குன்றத்தில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது.

இதுகுறித்து காவல் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் அளித்த போலீஸார், அந்த காரை பின் தொடர்ந்து சென்று மாதவரம் ரவுண் டானா அருகே மடக்க முயன்றனர். எனினும், கார் சிக்கவில்லை.

ரெட்டேரி பகுதியில் சென்ற அந்த காரை, அங்கு பணியில் இருந்த திருமங்கலம் போக்குவரத்து எஸ்.ஐ. இசக்கி முத்து(58), ராஜ மங்கலம் போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ. தணிகைவேல்(51) ஆகி யோர் தடுத்து நிறுத்த முயன்றனர். 2 எஸ்.ஐ.க்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த கார், கொளத்தூர்-லட்சுமியம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றுவிட்டது.

காரை பின்தொடர்ந்து வந்த போலீஸார், மதுபோதையில் அந்த காரை ஓட்டி வந்த, பெரம்பூர் ரமணா நகரைச் சேர்ந்த ரமேஷ்(42) என் பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். செங்குன்றத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்ற அந்த நபர், வீடு திரும்புகையில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியது தெரிய வந்தது. கார் மோதி காயமடைந்த 2 எஸ்.ஐ.கள் மற்றும் கொளத்தூர் தங்கசாமி(65), அவரது மகன் கஜேந் திரன்(23) ஆகிய இருவர் என 4 பேர் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x