Published : 17 Mar 2016 09:08 PM
Last Updated : 17 Mar 2016 09:08 PM

பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும்: இல.கணேசன்

பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும். முதல்வர் பதவி உட்பட எந்த நிபந்தனையையும் விஜயகாந்த் விதிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:

தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஆனால், அவரது மனைவி பிரேமலதா, தேமுதிகவுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகள் சேரலாம் என கூறியிருக்கிறார். எனவே, தேமுதிகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும் என நம்புகிறோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை.

கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் பலமுறை பேசினோம். முதல்வர் பதவி உட்பட எந்த நிபந்தனையையும் அவர் விதிக்கவில்லை. கூட்டணியை பொறுத்தவரை முடிவானால் மட்டுமே வெளியில் சொல்ல முடியும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சொன்னால் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடும்'' என இல.கணேசன் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x