Published : 01 Feb 2016 08:45 AM
Last Updated : 01 Feb 2016 08:45 AM

வள்ளுவர் கோட்டத்தில் காட்டன் பேப் 2016 கண்காட்சி பிப்ரவரி 7 வரை நடக்கிறது: 15 மாநில துணி வகைகள் கிடைக்கும்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காட்டன் பேப் 2016 கைத்தறி கண்காட்சி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. 15 மாநிலங்களிலிருந்து வந்துள்ள கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 125-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் இவற்றை காட்சிக்கு வைத்துள்ளனர்.

லக்னோவிலிருந்து நுண்ணிய வேலைப்பாடு கொண்ட சுடிதார், சேலைகள், குர்தா பைஜாமா, குஜராத்தைச் சேர்ந்த எத்னிக் பிரின்ட் குர்தீஸ், ராஜஸ்தானின் பிளாக் பிரின்ட் டிரஸ் மெட்டீரியல், கோட்டா தோரியா துணி ரகங்கள், பெண்கள் குர்தா, சோளி, பஞ்சாபின் பாட்டியாலா, புல்காரி ஆடை ரகங்கள், மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி சல்வார் ரகங்கள், மகேஸ்வரி சல்வார், பத்திக் பிரின்ட் டிரஸ் மெட்டீரியல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாந்தி நிகேதன் டன்ட் சேலை, காந்தா சேலைகள், சிபான் மற்றும் கிரேப் துணி ரகங்கள், ஒடிஸாவின் சம்பல்புரி இக்கத் சேலைகள், ஆந்திராவின் கலம்காரி வெஜிடபிள் டை சேலைகள், கத்வால் ஜரிகை பார்டர் டிரஸ், தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த சேலைகள், பர்தா, படுக்கை விரிப்புகள் மற்றும் இமாசலப் பிரதேசம், உ.பி. மாநில துணி ரகங்களும், ராஜஸ்தான் ஸ்டோன் நகைகள், மெட்டல் நகைகள், வீட்டை அலங்கரிக்கும் கலைப் பொருட்கள் ஆகியவற்றை இங்கு தேர்வு செய்யலாம்.

காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியில் துணிகள் வாங்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x