Published : 23 Feb 2016 08:21 AM
Last Updated : 23 Feb 2016 08:21 AM

குண்டு பாய்ந்ததில் தொடையில் படுகாயம்: சென்னை பொது மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை - சுட்டது யார்? போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை மாவட்ட மலை அடிவார கிராமத்தில் இரவு நேரத்தில் வெளியே சென்ற சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தொடைகளில் பலத்த காயம் அடைந்த அவனுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ள தீதாண்டப்பட்டு என்ற மலை அடிவார கிராமத்தை சேர்ந்த தம்பதியர் பாண்டியன் - வாசுகி. விவசாயம் செய்து வருகின்றனர். வீட்டில் மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்கின்றனர். இவர்களது மகன் சக்திதாசன் (13), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.

நேற்று முன்தினம் இரவு நேரமாகியும், வெளியே சென்ற 2 மாடுகள் வீடு திரும்பவில்லை. மாடுகளை தேடுவதற்காக வாசுகியும், மகன் சக்திதாசனும் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. சக்திதாசன் அலறியபடி கீழே விழுந்தான். ரத்த வெள்ளத்தில் துடித்த அவனை அருகே உள்ள மருத்துவமனைக்கு வாசுகி தூக்கிச் சென்றார்.

சிறுவனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவனது தொடைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்குள், தகவல் அறிந்து கண வர் பாண்டியன் மற்றும் உறவினர் கள் மருத்துவமனைக்கு வந்தனர். டாக்டர்கள் கூறியபடி, மேல் சிகிச் சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சக்திதாசன் நேற்று சேர்க்கப் பட்டான்.

டாக்டர்கள் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்த்தனர். வலது தொடையில் குண்டு பாய்ந்து வெளி யேறியுள்ளது. தொடை சதைப் பகுதி என்பதால் குண்டு எளிதில் உள்ளே சென்று அதே வேகத்தில் வெளியே வந்துவிட்டது. தொடை யில் துப்பாக்கி குண்டு இல்லை. எலும்பு, நரம்புகளும் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால் காயம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று டாக்டர்கள் கூறினர்.

சுட்டது யார்?

மலை அடிவாரப் பகுதி என்பதால், இரவு நேரங்களில் சிலர் மிருகங்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுகின்றனர். அருகில் போலீஸ் பயிற்சி மையமும் இருக்கிறது. இதில் யாரோ சுட்டதில்தான் சிறுவன் மீது குண்டு பாய்ந்திருக்கும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x