Last Updated : 06 Feb, 2016 08:58 AM

 

Published : 06 Feb 2016 08:58 AM
Last Updated : 06 Feb 2016 08:58 AM

100 நாள் வேலை திட்டத்தில் 28 கோடி மனித வேலை நாட்கள் முடிக்கப்பட்டுள்ளன: ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

கிராமப்புற மக்களுக்கு வேலை அளிக்கும் விதமாக செயல்படுத்தப் பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துடன், இதர திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தியதில் நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் தேர்வு செய் யப்பட்டு சமீபத்தில் விருது அளிக் கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அதிக மனித சக்தி நாட்களை கையாண்ட மாநிலங்களில் முத லிடத்தில் தமிழகமும், 2- வது இடத் தில் மேற்கு வங்கமும் உள்ளது.

திட்டப் பணிகள் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

முதலில், கிராமங்களில் குளங் களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மட்டும் செய்து வந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தற்போது, கட்டிடங்கள் கட்டுதல், வனத்துறையினருடன் இணைந்து செடிகளை நடுதல், வேளாண் துறைக்கான பண்ணை குட்டைகள் வெட்டுதல், கிணறு வெட்டுதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகின்றனர்.

100 நாள் வேலை திட்டத்தில், நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் பணியாற்றுவோர் அடிப்படையில் மனித சக்தி நாள் கணக்கிடப்படு கிறது. 2015-16ம் நிதியாண்டுக்கு 37 கோடியே 29 லட்சம் மனித சக்தி நாட்கள் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளன. இதில், தற்போது வரை 28 கோடி மனித சக்தி நாட்கள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கு வங்கம் 15 கோடி மனித சக்தி நாட்களை மட்டுமே முடித்துள் ளது. நாடு முழுவதும் செயல்படுத் தப்படும் இத்திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மட்டும் 19 சதவீதம் ஒதுக்கீடு கிடைக்கிறது.

ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாக வேலை அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், அவர் களுக்கான சம்பளம் குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், 60 லட்சம் குடும்பங்களே, 100 நாள் வேலை திட்டப்பணிகளில் ஈடுபடு கின்றனர். அதிலும் குறிப்பாக 10 லட்சம் குடும்பங்களே 100 நாட் கள் பணிகளையும் நிறைவு செய்கின் றன. தற்போது வேலை அட்டை யுடன், ஆதார் எண் இணைப்பு பணி கள் ஒருபுறம் நடந்து வருகின்றன.

தற்போது வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல் வேறு துறைகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படு கிறது. குறிப்பாக பசுமை வீடுகள் திட்டத்துக்கான கழிவறை அமைத் தல், அலுவலக கட்டிட பணிகள், மரம் நடும் பணி போன்றவை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேறு மாநிலங்களில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் தான் தமிழகத்துக்கு விருது கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x