Published : 17 Feb 2016 08:11 AM
Last Updated : 17 Feb 2016 08:11 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் உயிர் பிழைத்த இளைஞர்: தனியார் மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவாகும்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கல்லீரல் மாற்று அறு வை சிகிச்சை அரங்கத்தை கடந்த மாதம் 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த அறுவை சிகிச்சை அரங்கத்தில் முதல் முறையாக இளைஞருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த வர் பிரேம்குமார் (24). பொறியியல் பட்டதாரி. கல்லீரல் செயலிழந்ததால் உயிருக்கு போராடிய இவருக்கு மாற்று கல்லீரல் பொருத்துவதே தீர் வாக இருந்தது. தனியார் மருத் துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் குழுவினர் பரி சோதனை செய்து பார்த்துவிட்டு அவருக்கு மாற்று கல்லீரல் பொருத்த திட்டமிட்டனர். மூளைச்சாவு அடைந் தவரிடம் இருந்து தானமாக கல்லீரல் கிடைக்கும் வரை, டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது கல்லீரல் பிரேம்குமாருக்கு பொருத்தமாக இருந்தது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.ரவிச்சந்திரன், டாக்டர் ஜெஸ்வந்த், மயக்க டாக்டர் சதீஷ், குளோபல் மருத்துவமனை மயக்க டாக்டர் இளங்குமரன் ஆகி யோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் தானமாக கிடைத்த கல்லீரலை பிரேம்குமாருக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.

உடல்நிலை முழுவதுமாக குண மடைந்ததால், அவர் மருத்துவமனை யில் இருந்து நேற்று வீட்டுக்கு சென்றார். முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரேம்குமாரை சந்தித்து நலம் விசாரித்தனர். இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநர் பி.ரவிச்சந்திரன், ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மருத்துவமனையில் கடந்த 1987-ம் ஆண்டு இரைப்பை, குடல், கல்லீரல் மற்றும் கணைய நோய் பிரிவு தொடங்கப்பட்டது.

ரூ.50 லட்சம் செலவாகும்

2005-ம் ஆண்டு அறுவை சிகிச் சைக்கான மையமாக இது மேம்படுத் தப்பட்டது. இந்த மையத்தில் புதிதாக திறக்கப் பட்ட உலகத்தரம் வாய்ந்த அதி நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தில் முதல் முறை யாக இளைஞருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய் யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப் பட்டுள்ள இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘கின்னஸ்’ டாக்டர்

தமிழகத்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறு வை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா, இங்கிலாந்தில் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது சென்னை குளோபல் மருத்துவ மனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குழுவின் தலைவராக இருக்கும் இவர், 3 ஆயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். டாக்டர் கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை சிறந்த முறையில் செய்வதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெற வேண் டும். அது முடியாது என்பதால், சென்னை குளோபல் மருத்துவ மனை கல்லீரல் அறுவை சிகிச்சை குழுவுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி டாக்டர் முகமது ரேலா குழுவினர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பயிற்சியை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களுக்கு வழங்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x