Published : 01 Feb 2016 03:51 PM
Last Updated : 01 Feb 2016 03:51 PM

இருசக்கர வாகனத்தில் இந்தியாவை சுற்றும் பெங்களூரு பெண்: 38 ஆயிரம் கிலோமீட்டர் தனிமை பயணம்

பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா என்பதை உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் 110 நாட்கள் தனது இருசக்கர வாகனத்தில் தனிமையில் சுற்றி வருகிறார் பெங்களூருவை சேர்ந்த பெண் இஷாகுப்தா.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் இஷாகுப்தா (37). இவர், பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை உணர்த்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் தனது பயணத்தை குடியரசு தினமான ஜன. 26-ம் தேதி சென் னையில் தொடங்கினார். தனது பயணத்தில் 110 நாட்களில் 110 நகரங்கள், கிராமங்கள் என மொ த்தம் 38 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். பயணத்தை டெல்லியில் முடிக்க உள்ளார்.

தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்த இவர், விழிப்புணர்வு பயணமாக இந்த பயணத்தை தொடக்கியுள்ளார். முன்னதாக இவர் 2014-ம் ஆண்டு இந்தியா முழுவதும் 7 ஆயிரம் கிலோமீட்டர் தனி ஒருவராக பயணம் செய்து சாதனை படைத் துள்ளார்.

நேற்று காலை கொடைக்கானல் வந்த இஷாகுப்தா கூறியதாவது: இந்தியா பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பை தருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தனிமையில் இருசக்கர வாகனப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். சென்னையில் பயணத்தை தொடங்கி பல்வேறு நகரங்களைக் கடந்து மலைப்பகுதியான கொடை க்கானல் வந்துள்ளேன்.

எனது பயணத் திட்டம் மொத்தம் 110 நாட்கள். இதில் இந்தியா முழுவதும் உள்ள 110 நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களை கடந்துசெல்ல உள்ளேன். மொத்த பயண தூரம் 38 ஆயிரம் கிலோமீட்டர். எனது இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி உள்ளது.

நான் எங்கெங்கு சென் றுவருகிறேன் என்பது கம்ப்யூட்டரில் பதிவாகும். இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் தனி ஒரு பெண்ணாக இந்தியாவை சுற்றி யவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பேன். கின்னஸ் சாதனையிலும் இடம் பெற வாய்ப்புண்டு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x