Published : 28 Dec 2015 08:40 AM
Last Updated : 28 Dec 2015 08:40 AM

கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தை எதிர்த்து இந்து முன்னணி உண்ணாவிரத போராட்டம்: மாதவரம் அருகே போலீஸ் குவிப்பு

மாதவரம் அருகே உள்ள மஞ்சம் பாக்கத்தில், உயர் நீதிமன்ற அனுமதி பெற்று நடந்த கிறிஸ் வத ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் அனுமதி யின்றி நேற்று இந்து முன்னணி யினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மதமாற்றத்துக்கு வழிவகுக்கும் என கூறி நடந்த இப்போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மாதவரம் அருகே உள்ளது மஞ்சம்பாக்கம். கடந்த 2013-ம் ஆண்டு, இங்குள்ள எல்லையம் மன் கோயில் அருகே 2.50 ஏக்கர் நிலத்தை வாங்கிய கிறிஸ்தவ அறக்கட்டளை ஒன்று அந்த இடத் தில் தேவாலயம் கட்ட முடிவு செய்தது. இங்கு தேவாலயம் கட்டப்பட்டால் மதமாற்றம் நடக்க வாய்ப்புள்ளது என்றும் எல்லை யம்மன் கோயில் விழாக்களின் போது சுவாமி வீதியுலா நிகழ்வு களின் போது தேவையற்ற பிரச் சினைகள் ஏற்படும் என்றும் கூறி தேவாலயம் கட்ட அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் ஜெபக் கூட்டம் நடத்த கிறிஸ்தவ அறக்கட்டளை நிர்வாகி கள் கடந்த அக்டோபர் மாதம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். ஆனால், ஜெபக் கூட்டம் நடந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கருதி மாதவரம்- பால் பண்ணை போலீஸார், கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, ஜெபக்கூட்டம் நடத்த அனுமதிகோரி கிறிஸ்தவ அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஜெபக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படு கிறது.

இதனால், காவல்துறை அனுமதியோடு நேற்று காலை மஞ்சம்பாக்கத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கிறிஸ்தவர் கள் ஜெபக் கூட்டம் நடத்தினர். இதில் 800-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதனால் ஆத்திரமைடந்த இந்துமுன்னணியினர் ஜெபக் கூட்டத்துக்கு எதிராக, நேற்று காலை முதல், மாலை வரை மஞ்சம்பாக்கம் எல்லையம்மன் கோயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மனோகர், கொல்லிமலை சித்தர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி இல்லை. அதையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 300 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், நேற்று அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x