Published : 22 Dec 2015 08:33 AM
Last Updated : 22 Dec 2015 08:33 AM

நவம்பர் கணக்கீடு கட்டணம் செலுத்த மின்வாரியம் அவகாசம்

அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், நவம்பரில் மின்கணக்கீடு (ரீடிங்) எடுக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘வெள்ள பாதிப்பு காரண மாக குடியிருப்புகளில் டிசம்பரில் கணக்கெடுக்கப்பட்ட மின் கட்டணங்களை செலுத்து வதற்கு மட்டுமே ஜனவரி வரை காலக்கெடு அளிக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாத கட்டணங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்’ என மின் வாரியம் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட் டங்களில் உள்ள வீட்டு உபயோகிப்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி வரை தங்களது மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற் கண்ட அவகாசம் நவம்பர் மாதத்தில் மின் கணக்கீடு எடுக்கப்பட்ட வீட்டு உப யோகிப்பாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x