Published : 28 Dec 2015 08:58 AM
Last Updated : 28 Dec 2015 08:58 AM

என்னுடைய பலமும், பலவீனமும் வெளிப்படையான பேச்சுதான்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருமிதம்

விழுப்புரத்தில் கவியரசு கண்ண தாசன் நற்பணி மன்றம் சார் பில், 13-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோ வன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

“கள்ளம் கபடமற்ற குழந்தை யைப் போன்று வாழ்ந்தவர் கண்ணதாசன். எனது தந்தையும், அவரும் பிரிக்க முடியாத நட்பில் இருந்தனர். என்னுடைய பலமும், பலவீனமும் வெளிப்படையான பேச்சுதான். இவற்றை மனதில் உள்ளதைப் பேசும் பெரியார், சம்பத், கண்ணதாசன் போன்றோ ரிடம் கற்றதாகும்.

அரசியல் சூழல் மாறும்

தமிழகத்தில் பெய்த கனமழை யால் பலர் இறந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன. அரசும் செயலிழந்து விட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை இரு தினங்களுக்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்காது. பணத்தை கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள் ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நிச்சயம் அரசியல் சூழல் மாறி இருக்கும்.

மக்களுக்கு நல்லது செய்வோர் ஆட்சி ஏற்பட்டிருக்கும். தவறுகளை சுட்டிக்காட்டும் சிறந்த அரசியல்வாதியாகவும் கண்ணதாசன் இருந்தார். அது போல இப்போது கவிஞர்கள் கிடையாது. சிலர் பணத்துக்காக எழுதுகிறார்கள். மனதில் பட்டதை எழுதுபவனே உண்மையாக கவிஞன்”.

இவ்வாறு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x