Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

புதுச்சேரிக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்கிறது; இளையோருக்கான தடுப்பூசிக்காக ரூ.1 கோடிக்கு ஆர்டர்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட கரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் கருவிகளை புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா தடுப்புநடவடிக்கையாக இளை யோருக்கான தடுப்பூசிக்காக ரூ. 1 கோடிக்கு ஆர்டர் போடப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மத்திய அரசு 10 என்.ஐ.வி வென்டிலேட்டர்கள், 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 22 அவசரகால சிறிய வகை வென்டிலேட்டர்களை அனுப்பியுள்ளது. இதை சுகாதாரத் துறையிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்படைத்தார்.

இதையடுத்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க, அதிகாரிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

இது அரசு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. குறிப் பாக 220 வென்டிலேட்டர்கள், 1,200 ஆக்சிஜன் படுக்கை இருமாதங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரிக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கப்படும் என்றுமத்திய அரசு கடிதம் அனுப்பிஇருக்கிறது. 2 டிஜி மருந்து தற்போது சந்தைக்கு வந்துள்ளது.புதுச்சேரிக்கு வழங்க வேண்டுமென அந்த நிறுவனத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.

புகையிலை நுரையீரலைப் பாதிக்கும். அதை பயன்படுத்து வதை அனைவரும் தவிர்க்கவேண்டும். அரசு அலுவலகங்களில் புகையிலை இல்லாத சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் ராஜ்நிவாஸிலும் புகைப்பிடிக்க அனுமதியில்லை.

புகையில்லா ராஜ்நிவாஸாக இருக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளேன்.

புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் தேவை. ஒரே நேரத்தில் அனைத்தும் வாங்க இயலாது. நாங்கள் ஒவ்வொரு முறையும் 30 ஆயிரம் தடுப் பூசிகளாக வாங்குகிறோம். இலவ சமாக தருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தனர். தற்போது பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். நேற்று ரூ. 1 கோடிக்கு மேல் தடுப்பூசி பெற ஆர்டர் தந்துள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 1 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தடுப்பூசியை தேவைப்பட, தேவைப்பட வாங்குகிறோம். நிறைய வாங்கி கையிருப்பில் வைத்திருக்க இயலாது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x