Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM

குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் இலவச ஆக்சிஜன் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த என்.ராமசாமி(53), எம்.எஸ்.மாதவன் (53) ஆகியோரது நண்பர் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் இறந்து விட்டார். இதனால் வேதனையடைந்த இருவரும், இதே நிலை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க முடிவுசெய்தனர்.

இதற்காக, ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து, அதில் ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணத்தைப் பொருத்தி, தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகளை, இலவசமாக அழைத்துச் செல்லும் சேவையைத் தொடங்கினர்

மக்கள் விழிப்புணர்வு மைய நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வி.சந்தானம் (83) இந்த சேவையைத் தொடங்கிவைத்தார். குரோம்பேட்டை, பல்லாவரம், திருநீர்மலை, பம்மல், அனகாபுத்துார் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், இந்த இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி தேவைப்படுவோர் 99623 77782, 94442 54850, 9884613936 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x