Published : 22 Dec 2015 08:08 AM
Last Updated : 22 Dec 2015 08:08 AM

சோதனை எலிகளாக மனிதர்களை பயன்படுத்தும் மருந்து நிறுவனங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இதுவரை 2,500 பேர் மரணம்

*

மருந்து நிறுவனங்கள் மனிதர்களை சோதனை எலிகளாக பயன்படுத்தியது தொடர்பாக விசாரிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு. ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

பன்னாட்டு மருந்து நிறுவனங் கள், இந்திய மருந்து நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை இந்திய மக்களுக்கு வழங்கி சோதனை செய்து வருகின்றன. விதிப்படி இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவோருக்கு உரிய இழப்பீடு, தொடர் மருத்துவச் செல வீனம் வழங்க வேண்டும். மனிதர் கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய, இந்திய மருத்துவ ஆய்வு மையம் தனது கடமைகளை சரியாகச் செய்வதில்லை. பொது வாக, இதுபோன்ற பரிசோதனைகள் மத்திய நல வாரியத்தின் நேரடி கண்காணிப்பில், முறையாக பதிவு செய்த பிறகே நடைபெற வேண் டும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசின் அனுமதி பெறாமல் மருந்து சோதனை நடத்தப்பட்டது தொடர்பான செய்தி, அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சில தகவல்களைக் கேட்டு மனு அளித் தேன். ஆனால், அந்த தகவல் களை வழங்க முடியாது என மறுத்துவிட்டனர்.

மனிதர்களிடம் நடத்தப்படும் மருந்து சோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளால், இந்தியாவில் 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை 2500 பேர் மரணமடைந்துள்ளனர். இவர் களில் 22 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் பக்கவிளைவுகள் ஏற்பட்டு, குறைபாட்டுடன் குழந்தை கள் பிறந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மனநலம் குன்றிய வர்களிடம் சோதனைகள் நடத்தப் பட்டுள்ளன.

மனிதர்களிடம் மருந்து சோதனை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு தல்களை உச்ச நீதிமன்றம் அறி வித்தது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் 2008-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை மனிதர்களிடம் மருந்து மற்றும் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், சோத னைக்கு உட்படுத்தப்பட்டவர் களுக்கு உரிய மருத்துவ வசதி, காப்பீட்டு வசதி மற்றும் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண் டும்.

இதுபோன்ற மருந்து சோதனைகளில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி.ராம சுப்பிரமணியன், என்.கிருபா கரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தாரர் நேரில் ஆஜராகி வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு பதில் மனு தாக்கல் செய்ய அரசின் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர், சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை டீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x