Published : 25 May 2021 07:47 PM
Last Updated : 25 May 2021 07:47 PM

கோவிட் தடுப்புப் பணிகள்; மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் ஓராண்டு பணிபுரிய விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ககன்தீப் சிங் பேடி: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 25) வெளியிட்ட அறிவிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவிட் தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 26.05.2021 இரவு 8.00 மணிக்குள் மருத்துவ அலுவலர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையதளத்திலும், செவிலியர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து, மருத்துவ அலுவலர்கள் 94983 46492 என்ற எண்ணுக்கும், செவிலியர்கள் 94983 46493 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், gccteledoctor2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

விருப்பம் மற்றும் கல்வித் தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் 27.05.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகை கூட்டரங்கில் (தரைதளம்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும், 26.05.2021 இரவு 8.00 மணிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.

மேற்கண்ட பதவியானது முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 28.05.2021 அன்று பணியில் சேர வேண்டும் என, ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x