Published : 28 Dec 2015 08:56 AM
Last Updated : 28 Dec 2015 08:56 AM

மின்சாரம் கொள்முதல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தனியார் அனல்மின் நிலையங் களில் இருந்து மின்சாரம் கொள் முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராமதாஸ் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின்சாரம் யூனிட் ரூ.3-க்கு கிடைத்த போதிலும், யூனிட்டுக்கு ரூ.15.10 என விலை கொடுத்து தனியார் அனல்மின் நிலையங்களில் இருந்து மின்சா ரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது.

இதனால் அரசுக்கு 2007 முதல் 2014-ம் ஆண்டுவரை ரூ. 2,040 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் காற்றாலை மின்சாரம் கிடைத்தபோதிலும், அதிக விலைக்கு தனியாரிடம் அனல் மின்சாரம் வாங்கியது ஏன்? இது தொடர்பாக சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலை யம் அருகே எந்த தொழிற்சாலை களுக்கும் அனுமதி கொடுக்க கூடாது என்பது விதி. ஆனால், அணுமின் நிலையம் அருகே 756 ஏக்கர் நிலத்தில் தாது மணல் எடுக்க தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்திய அணுசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் ரூ.60 லட்சம் கோடி அளவுக்கு மோனோசைட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தாது மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். தாது மணல் குவாரிகளை அரசுட மையாக்க வேண்டும். அதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக் கும். அரசு மதுக்கடைகளை நடத்த வேண்டிய அவசியமும் இருக்காது.

வழக்கை வாபஸ் பெறவேண்டும்

கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் முதல் அணு உலையை உடனடியாக மூட வேண்டும். கூடுதலாக அணு உலைகள் இந்த பகுதியில் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 380 வழக்குகளையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில் பாமகவால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அன்புமணி ராமதாஸ் மட்டுமே முதல்வர் வேட்பாளருக்கு முழு தகுதியானவர்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x