Published : 13 Dec 2015 01:15 PM
Last Updated : 13 Dec 2015 01:15 PM

வெள்ளத்தை கடந்து பணிக்கு வந்த ரயில்வே பெண் அதிகாரி: 24 மணிநேரம் பணியாற்றி சாதனை

சென்னையில் பெய்த கனமழை யின்போது வெள்ளத்தை கடந்து பணிக்கு வந்த பெண் ரயில்வே அதிகாரி, தொடர்ந்து 24 மணிநேரம் பணிபுரிந்து ரயில்களின் இயக்கத்தை கவனித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜே.கீதாசுரோ. இவர் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயக்கம் மற்றும் கண்காணிப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் வேணுராஜன், தனியார் நிறுவனத் தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மதி (12), ரிஸ்மித்ரா (7) என்று இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஸ்தம்பித்து நிற்க, பொதுபோக்குவரத்துகளான மாநகர பேருந்து மற்றும் ரயில் கள்தான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. இதில் ரயில்கள் சிக்கலின்றி இயங்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் கீதாசுரோ. மழையால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்க, தனது வீட்டில் இருந்து சுமார் 4 மணிநேரம் பயணம் செய்து அலுவலகம் வந்து 24 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றி, ரயில்கள் இயங்க நடவடிக்கை எடுத்துள்ளார் கீதாசுரோ.

இது தொடர்பாக கீதாசுரோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நான் ரயில்வே துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய அனு பவத்தில் இப்படி ஒரு மழையையோ, வெள்ளத்தையோ பார்த்ததில்லை. பெருமழைக்கு அடுத்த நாள் காலை 8 மணிக்கு நான் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது வானம் இரவுபோல் இருண்டு கிடந்தது. நான் பேருந்தை பிடிப் பதற்காக சென்றேன் ஆனால் எனக்கு பேருந்து கிடைக்க வில்லை. எப்படியும் அலுவலகத் துக்கு சென்றாகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் சுமார் 2 கி.மீ தூரம் 4 அடி தண்ணீரில் நடந்து தாம்பரம் சென்றேன். அங்கு மின்சார ரயில்களும் இயக்கப்படவில்லை.

பின்னர், ஜிஎஸ்டி சாலைக்கு வந்து 3 மாநகர பேருந்துகள் மாறி, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றேன். அப்போதுதான் சைதாப்பேட்டை அருகே விரைவு ரயில்கள் மற் றும் புறநகர் மின்சார ரயில் பாதைகளை சீரமைக்கும் பணி கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான் அறிந்த வரையில் முதல்முறையாக அப்போதுதான் ரயில்சேவை முற்றிலும் தடைப்பட்டது.

எழும்பூர் வழியாகத்தான் சீரமைப்புப் பணிகளுக்கான உதிரி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. ரயில்களின் இயக்கம் குறித்து உடனுக்குடன் தகவல்களை அளிக்கும் பணியில் எங்கள் துறையைச் சேர்ந்த மற்றவர்களுடன் சேர்ந்து ஈடு பட்டோம்.

அன்றைய தினம் காலை 10 மணிமுதல் சுமார் 24 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றினேன். அன்றைய சூழலில் அந்த 24 மணிநேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. ஒரு பெண்ணாக இருந்து சவால்களை எதிர்கொண்டு பணியாற்றிய அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x