Published : 07 Dec 2015 08:32 PM
Last Updated : 07 Dec 2015 08:32 PM

சென்னையில் செவ்வாய்க்கிழமை 12 விரைவு ரயில்கள் ரத்து

12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் – மும்பை சிஎஸ்டி (11042), ஜிடி(12615), தமிழ்நாடு (12621) மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து கயா (12390), தூத்துக்குடி (16129) ஆகிய விரைவு ரயில்கள் செவ்வாயன்று (8-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், சேலம் – சென்னை எழும்பூர் (11064), கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் (12674), கொல்லம் – சென்னை சென்ட்ரல் (06125), திருவனந்தபுரம் – குவஹாட்டி (12507), திருவனந்தபுரம் – கரக்பூர் (12512), ஆலப்புழா – தன்பாத் (13352), எர்ணாகுளம் – பாட்னா (22643) ஆகிய விரைவு ரயில்களும் செவ்வாயன்று ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x