Published : 15 Dec 2015 08:00 AM
Last Updated : 15 Dec 2015 08:00 AM

ஆவணம், சான்றிதழை இழந்தவர்கள் நகல் ஆவணம் பெறுவதற்கான சிறப்பு முகாம் தொடங்கியது: சென்னையில் 5,620 பேர் மனு

வெள்ளத்தில் முக்கிய சான்றி தழ்கள், ஆவணங்களை இழந்த வர்கள் நகல் சான்றுகள் பெறுவதற் கான சிறப்பு முகாம் நேற்று தொடங் கியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் ரேஷன் அட்டை, வீட்டுப் பத்திரம் போன்ற வற்றை இழந்து பலரும் தவிக்கின்ற னர். இந்நிலையில், நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலம்/ வீட்டு கிரயப் பத்திரம், ஆட்டோ ஓட்டுநர் உரிமச் சான்று, வாகன பதிவுச்சான்று உள்ளிட்ட சான்றுகள் மற்றும் ஆவணங்களின் நகல் சான்று, மற்றும் ஆவணங்களை பொதுமக்கள் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதற்காக 4 மாவட்டங்களிலும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 4 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கின.சென்னை மாவட்டத்தில் 10 தாலுகா அலுவலகங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று சென்னை மாவட்ட அளவில் மொத்தம் 5,620 பேர் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x