Published : 11 Dec 2015 03:01 PM
Last Updated : 11 Dec 2015 03:01 PM

வெள்ள நிவாரணப் பணிகளில் அதிருப்தி: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததால் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது. சென் னையில் 90 சதவீதத்துக்கும் மேற் பட்ட பகுதிகளில் குடிநீர் கிடைக்க வில்லை. மின் விநியோகமும் கிடை யாது. சொந்த வீட்டிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் தொடர்பாக கடந்த 4-ம் தேதி அரசிடம் மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை வழங்க உத்தரவிட வேண் டும். நிவாரணப் பணிகளை ஒருங் கிணைக்க சிறிய அளவில் குழுக் களை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இந்த மனுவை விசாரித்து, தமிழ கத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அட்வ கேட் ஜெனரல் அல்லது கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என்று முதலில் உத்தர விட்டார். பின்னர், பெரும்பான்மை யான பொதுமக்களின் நலன் இருப்பதால், இவ்வழக்கை தலைமை நீதிபதியின் முதல் அமர் வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,இவ்வழக்கை உயர் நீதிமன்ற முதல் அமர்வு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறுகை யில், “நிவாரண உதவி வழங்கு வதில் ஒருங்கிணைப்பு இல்லை. ராணுவம், கடலோரக் காவல்படை, கடற்படையினர் மீட்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர். அதனால், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப் பதற்கு முன்பு பாதுகாப்புத் துறை யின் கருத்தையும் கேட்க வேண்டும். வெள்ள நிவாரணத்துக்காக வந்துள்ள பொருட்கள் மற்றும் நிதி யை முதல்வரின் நிவாரண நிதியில் சேர்ப்பதற்கு பதிலாக என்ன நோக்கத்துக்காக வந்ததோ அதற் காக பயன்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அப்போது அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, “நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் எந்த மெத்தனமும் இல்லை. மழை வெள்ளத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வீடு வீடாகப் போய் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து மனுவுக்குப் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதி பதிகள், வழக்கு விசார ணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x