Published : 28 Dec 2015 08:24 AM
Last Updated : 28 Dec 2015 08:24 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட கட்சியினர் விருப்பம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென காங்கிரஸில் உள்ளவர் கள் விரும்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாத ஒழிப்பு, நதிநீர் பங்கீடு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி சென்று விளம்பரம் தேடிக் கொள்கிறார். தமிழக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறிக்கொண்டு இருப்பதை தவிர்த்துவிட்டு உடனடியாக அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

சென்னையில் பெய்த மழையால் சிறு, குறு தொழிற்சாலைகளை நடத்தி யவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, வட்டியில்லா மற்றும் மானியத்துடன் கூடிய கடனை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்படும்.

காமராஜர் ஆட்சிக்குப் பிறகு தமி ழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத தால் மாநில வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டுமெனில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸை சேர்ந்தவர்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x