Published : 11 Dec 2015 11:07 AM
Last Updated : 11 Dec 2015 11:07 AM

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் வெள்ள நிவாரணப் பொருளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட் டோருக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுங்கத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்காக வெளி நாடுகளிலிருந்து ஏராளமானோர் நிவாரணப் பொருட்களை அனுப்புவதாகவும், நிவாரணப் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய சுங்க கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் கோரிக்கைவிடுத்தனர்.

இதன் அடிப்படையில், வெளிநாடுகளிலிருந்து வெள்ள நிவாரணத்துக்காக அனுப் பப்படும் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்டவற்றுக்கான சுங்க கட்டணத்தை விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டிலிருந்து மேற் கண்ட நிவாரணப் பொருட்களை பெறுவோர், இறக்குமதி செய்யும் பொருட்களின் விவரத்தை மத்திய நிதித்துறையிடம் முன்கூட்டியே தெரிவித்து அதற்கான ஒப்புகை கடிதத்தை பெற வேண்டும். அந்தக் கடிதத்தை சுங்கத் துறை அதிகாரிகளிடம் காட்டினால், பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை பெற சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.என்.சாரியை 044-22560406 என்ற எண்ணிலும், கூடுதல் ஆணையர் டி.டிஜுவை 8754551301 என்ற எண்ணிலும் இணை ஆணையர் வி.பி.ராவை 9789521852 என்ற எண்ணிலும், உதவி ஆணையர் தங்கமணியை 9443246440 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x