Published : 26 Dec 2015 09:27 AM
Last Updated : 26 Dec 2015 09:27 AM

தமிழக அரசைக் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் கடலூரில் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம்

வெள்ள நிவாரணப் பணிகளில் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து வரும் 29-ம் தேதி கடலூரில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

நவம்பர் மாதம் முதல் பெய்த கன மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் மிகக் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் நிவாரண உதவி கள் அம்மாவட்ட மக்களுக்கு முழுமையாக கிடைத்ததாக தெரியவில்லை. கடலூர் மாவட் டத்தில் ரூ. 100 கோடிக்கு நிவாரணப் பணிகள் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகவும், இதில் உணவுக்காக மட்டும் ரூ. 40 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும்.

பெரும்பாலான வீடுகளில் வெள்ள நீர் புகுந்து ஒட்டு மொத்த உடைமைகளையும் இழந்து மக்கள் தவிக்கும்போது வேட்டி, சேலையும் 5 கிலோ அரிசியும் மட்டும் கொடுத்தால் மக்கள் என்ன செய்ய முடியும்? விவசாய நிலங்கள் மணல் மேடு களாக மாறியுள்ள நிலையில் அதனை சீரமைக்கவே பல ஆயிரம் தேவைப்படுகிறது. இந் நிலையில், ஏக்கருக்கு ரூ. 5 ஆயி ரத்து 400 மட்டும் கொடுத்தால் அதை வைத்து என்ன செய்ய முடியும்?

வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவற்றை தூர்வாரி ஆழப்படுத்தாததும், கரைகளை பலப்படுத்தாததுமே கடலூர் வெள்ள பாதிப்புக்கு காரணம். கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை கடலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டும் அதனைத் தடுக்க எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

எனவே, கடலூரை புறக்கணிக் கும் தமிழக அரசைக் கண் டித்து தேமுதிக சார்பில் கடலூரில் வரும் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாதிக்கப்பட்ட அனைவருக் கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளுக் கும், விவசாயத் தொழிலாளர் களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதற்காக நடத்தப் படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x