Published : 11 Dec 2015 10:24 AM
Last Updated : 11 Dec 2015 10:24 AM

வெள்ளத்தால் ஆதரவின்றி தவித்த செல்லப் பிராணிகளுக்கு அடைக்கலம் தந்து பராமரிப்பு: நெகிழவைக்கும் தன்னார்வலர்கள்

சென்னையில் மழை, வெள்ளத்தின்போது நிராதரவாகத் தவித்த நாய், பூனைகளுக்கு தன்னார்வலர்கள் சிலர் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியுள்ளனர்.

சென்னையில் பெய்த கன மழையால் மாநகரமே வெள்ளத் தில் மூழ்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீட்டு பிராணிகளான நாய், பூனைகளையும் இந்த வெள்ளம் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில், பொதுமக்க ளுக்கு உதவிக்கரம் நீட்டிய பல் வேறு குழுக்களில் ஒன்று, அந்த பணிக்கிடையே ஆதரவற்று வெள்ளத்தில் மிதந்துகொண்டி ருந்த வீட்டு பிராணிகளையும் காப்பாற்றி உணவு வழங்கி பராமரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வழக்கறிஞர் அஷ்டா வத் கூறியதாவது:

ஏவிஎம் சரவணனின் பேர னான டாக்டர் சித்தார்த் சரவ ணன், டாக்டர்கள் தீப்தி மொராய்ஸ், நவீன் மற்றும் முரளி விஜயகுமார், அரவிந்த் வர்ஷா ஆகியோர் என் நண்பர்கள். மழை வெள்ளத்தின்போது, பல் வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினோம். அப்போது ஏராள மான நாய்க் குட்டி, பூனைக் குட்டிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்தோம்.

இதையடுத்து முகநூலில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு பிராணிகளை பராமரிக்க தயாராக இருக்கிறோம். உங் கள் பகுதியில் இதுபோன்ற பிராணிகள் இருந்தால் எங்களி டம் ஒப்படையுங்கள்’ என்று தெரிவித்தோம். குட்டிகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட நாய், பூனைகளை பலர் எங்களிடம் ஒப்படைத்தனர்.

சித்தார்த் சரவணனின் சங்கரா ஹாலில் அவற்றை வைத்து பராமரித்தோம். பிராணி களுக்கான உணவுப் பொருட் களை பல்வேறு தன்னார்வலர்கள் எங்களிடம் வழங்கினர். கால்நடை மருத்து வரை நியமித்து அவற்றுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தோம்.

தத்தெடுத்த மக்கள்

மழைநீர் வடிந்த பிறகு, விரும்புவோர் அந்த பிராணிகளை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முகநூலில் அறிவிப்பு வெளியிட்டோம் பலரும் வந்து, அந்த பிராணிகளை தத்தெடுத்துச் சென்றனர். அவற்றுக்கு 10 நாட் களுக்கு தேவையான உணவை யும் தந்து அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x