Published : 06 Apr 2021 06:27 PM
Last Updated : 06 Apr 2021 06:27 PM

மாலை 5 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 63.60% வாக்குப்பதிவு; நாமக்கல்லில் 70.79%; நெல்லையில் 50.05%

சென்னை

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 70.79 சதவீதமும், குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் சத்யபிரதா சாஹு கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை பெரிதாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எங்கும் இல்லை. இவிஎம் பிரச்சினை எங்கும் இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது.

எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் குறித்து புகார் வந்துள்ளது. மாவட்ட அலுவலரிடம் தகவல் கேட்டுள்ளோம். மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் டோக்கன் அளித்து வாக்களிக்க வைப்போம். அதன் பின்னர் கடைசியில் கரோனா பாதித்த வாக்காளர்களை வாக்களிக்க வைப்போம்.

வாக்குப்பதிவு எவ்வளவு இருக்கும் என்று நான் கூறக்கூடாது. இருந்தாலும் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 74% வாக்குப்பதிவு இருந்தது. அந்த அளவை நெருக்கி வரும் என்று எதிர்பார்க்கிறோம். 6 மணிக்கு மேலும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கடைசியில் கரோனா தொற்றுள்ளோர் பிபிஇ கிட் அணிந்து வரலாம் அல்லது இங்கு தருவோம்”.

இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக 5 மணி நிலவரம் - வாக்குப்பதிவு சதவீதம்

தமிழகம் முழுவதும் 63.60%

சென்னை - 55.31%,

கடலூர் - 65.75%

காஞ்சிபுரம் - 62.96%,

செங்கல்பட்டு - 53.39%

திருவள்ளூர் - 61.96%,

திருவண்ணாமலை - 68.04%

வேலூர் - 67.30%

விழுப்புரம் - 68.97%

கள்ளக்குறிச்சி - 69.60%

திருப்பத்தூர் - 67.45%

ராணிப்பேட்டை - 67.82%

அரியலூர் - 67.13%

நாகப்பட்டினம் - 61.37%

பெரம்பலூர் - 68.36%

புதுக்கோட்டை - 68.48%

தஞ்சாவூர் - 65.72%

திருச்சி - 64.65%

திருவாரூர் - 66.54%

தருமபுரி - 68.35%

திண்டுக்கல் - 67.32%

கோயம்புத்தூர் - 59.25%

கரூர் - 69.21%

ஈரோடு - 65.93%

கிருஷ்ணகிரி - 65.98%

நாமக்கல் - 70.79%

நீலகிரி - 61.48%

சேலம் - 66.98%

திருப்பூர் - 62.15%

கன்னியாகுமரி - 62.27%

மதுரை - 60.96%

ராமநாதபுரம் - 61.67%

சிவகங்கை - 63.11%

தேனி - 64.95%

தூத்துக்குடி - 62.77%

திருநெல்வேலி - 50.05%

தென்காசி - 63.33%

விருதுநகர் - 67.08%

சென்னை, செங்கல்பட்டிலும் வாக்குப்பதிவு தொடர்ந்து மந்தமாகவே உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x