Published : 06 Nov 2015 07:43 AM
Last Updated : 06 Nov 2015 07:43 AM
‘சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் வளாகத்தில் உள்ள லூக்ஸ் சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் யாருக்கும் விற்கப்பட வில்லை. ஜாஸ் சினிமாஸ் நிறு வனம் வாடகைக்குதான் அங்கு தியேட்டர்களை நடத்திவருகிறது’ என்று கிளாஸிக் மால் டெவலப் மென்ட் கம்பெனி கூறியுள்ளது.
இதுதொடர்பாக கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற ஷாப்பிங் மால், மும்பையில் உள்ள கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி என்ற எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்த மாலில் 11 திரையரங்குகள் கொண்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர் அமைக்க எங்கள் நிறுவனம் தமிழக அர சிடம் இருந்து படிவம் ‘N’ உரிமம் பெற்றுள்ளது. தியேட்டர்களை நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு 1-2-2015 முதல் 14-12-2020 வரை வாடகைக்கு விட்டுள்ளோம். ஜாஸ் சினிமாஸ் நிறுவனமும் 1-2-2015 முதல், எங்களுக்கு மாத வாடகையை முறையாக செலுத்தி வருகிறது.
ஆனால், லூக்ஸ் சினிமாஸ் என்ற பெயரில் உள்ள 11 தியேட் டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறு வனம் ரூ.1,000 கோடிக்கு வாங்கி யுள்ளதாக ஊடகங்களில் செய்தி கள் வெளியாகின்றன. அவை உண்மைக்குப் புறம்பானவை. எங்களுக்கு சொந்தமான தியேட் டர்களை நாங்கள் யாருக்கும் விற்கவில்லை.
எங்களுக்கு சொந்தமான சொத் தில் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் மாத வாடகை உரிமை அடிப்படை யில் தியேட்டர்களை நடத்தி வரு கிறது. செய்தித்தாள், ஊடகங் களில் காட்டப்படும் லூக்ஸ் சினி மாஸ் கட்டுமானங்கள் அனைத் தும் வாடகை பாத்தியம் முடியும் போது, எங்கள் கம்பெனிக்கு சொந்தமானவையே.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT