Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் திமுக ஆளும் கட்சியாகும்; பாஜக எதிர்க்கட்சியாகும்: விழுப்புரம் பிரச்சாரத்தில் திருமாவளவன் கருத்து

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது.திமுக ஆளுங்கட்சியாகும்; பாஜக எதிர்க் கட்சியாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆத ரித்து நேற்று விழுப்புரத்தில் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் எம்.பி பிரச்சாரம் செய்து பேசியதாவது:-

கடந்த தேர்தலில் தமிழக மக்கள், ஜெயலலிதாவை நம்பியே வாக்களித்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜக இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஆட்டம் போடுபவர்களாக செயல் பட்டனர். பாஜகவின் பினாமி கட்சி யாகவே அதிமுக மாறி விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. அதற்கான அறி குறியே இல்லை. அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக மக்களிடையே மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. அதிமு கவை பாஜக விழுங்கி விடும்.

கூட்டணி கட்சிகளை முதலில்அழிப்பதுதான் அவர்களது வர லாறு. அதற்கு பீகார், அருணாச்சல பிரதேச மாநிலங்களை உதாரணங் களாக கூறலாம். புதுச்சேரி மாநி லத்தில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி விட்டு அந்த ஆட்சியை கவிழ்த்தது.

பாஜகவின் நோக்கம் திமுக, அதிமுகவை அழித்து விட்டு தமிழகத்தில் காலூன்றுவதுதான். இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆளும்கட்சியாகும். பாஜகஎதிர்க்கட்சியாகும். அவர்கள் 20 தொகுதிகளில் தானே போட்டியிடுகிறார்கள், எப்படி எதிர்க்கட் சியாக முடியும் என்று கேட்கலாம். அதிமுகவில் வெற்றி பெறும் ஒவ்வொருவரும் பாஜகவின் உறுப்பி னர்கள். அவர்களை பாஜகவினர் விலைக்கு வாங்கி விடுவார்கள். அதிமுகவை இந்தத் தேர்தலில் அழித்து விட்டு பாஜக 2-வது கட்சி யாக மாறும்.

இங்கு பாஜக வலிமை பெற்றால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள். தமிழக மண்ணை காப்பாற்றவேண்டிய பொறுப்பு திமுக, காங் கிரஸ் கட்சிகளுக்கு மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உள்ளது. சனாதன கும்பலை வேர்ஊன்ற விடாமல் அழிக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் புகழேந்தியை ஆதரித் தும், வானூர் தொகுதியில் போட்டி யிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னிஅரசுவை ஆதரித்தும் திருமாவளவன் பிரச் சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருமாவளவன், “மீனவர்களை சிறைபிடித்த சிங்கள அரசுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்க மளிப்பதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.

பாஜக கூட்டணி ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணியாகும். தேர் தல் ஆணையத்தின் செயல் பாடு தேர்தலை நடத்துவதில் மட்டுமே உள்ளது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்து வருகிறது.ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கில்லை” என்று கூறினார்.

‘தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து கேட்டதற்கு, “பதிலளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x