Last Updated : 28 Nov, 2015 08:44 AM

 

Published : 28 Nov 2015 08:44 AM
Last Updated : 28 Nov 2015 08:44 AM

கந்துவட்டிக் கொடுமைக்கு 2 பேர் பலி: தமிழகத்தில் அமலாகுமா ‘ஆபரேஷன் குபேரா’?

கந்துவட்டி கொடுமையால் பொள் ளாச்சியில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தைத் தொடர்ந்து, கேரளத் தைப் போன்று கந்துவட்டி வசூ லில் ஈடுபடுவோரைப் பிடிக்க தமிழகத்திலும் ‘ஆபரேஷன் குபேரா’ திட்டம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள் ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணமூர்த்தி(63). இவர் பொள் ளாச்சி கடைவீதியில் புத்தகக் கடை நடத்தி வருகிறார். மனைவி உஷா ராணி(53), மகன் பாலவிஜயபிர காஷ்(35), மருமகள் நித்யா(30). தொழிலை விரிவுபடுத்த வெளி யாட்களிடம் பாலகிருஷ்ணமூர்த்தி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி னாராம். எதிர்பாராதவிதமாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனையும், வட்டியையும் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால் வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் வட்டி, அசல் தொகை இரண்டும் சேர்ந்து லட்சக்கணக்கில் வேண்டு மென மிரட்டியதாகக் கூறப்படு கிறது.

இதில் மனமுடைந்த பாலகிருஷ் ணமூர்த்தி தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ம் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றார். அதில் அவரது மனைவி உஷாராணி, மகன் பாலவிஜய பிரகாஷ் இறந்தனர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த மகாலிங்கபுரம் போலீஸார், பொள்ளாச்சி வஞ்சியா புரம் பிரிவைச் சேர்ந்த மோகன் குமார்(42), கணேஷ்பாபு(40), பெரு மாள்(47) ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் கந்து வட்டி வசூலில் ஈடுபட்டு வந்ததாக நசீர் என்பவரையும், மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

உளவுப்பிரிவு கண்காணிப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ரம்யா பாரதி கூறும்போது, ‘பொள்ளாச்சி பகுதியில் கந்துவட் டிக் கொடுமைகள் அதிகம் நடப் பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள்கூட புகார் கொடுக்க முன்வருவதில்லை. 2015-ல் இதுதான் முதல் வழக்காகப் பதிவாகியுள்ளது. கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க உளவுப் பிரிவு மூலம் தகவல் சேகரிக்க உத் தரவிடப்பட்டுள்ளது. வெளியாட் கள் யாரேனும் இதை இயக்கு கிறார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது’ என்றார்.

ஜெட், ராக்கெட்

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரளத்தில் தடை இருப்பதால் எல்லையோர கோவை, பொள்ளாச்சி பகுதியில் கந்துவட் டிக்கு விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாரம், மாதம் என்ற கணக்கில் வட்டி வசூலித்த நிலை மாறி, ஜெட், ராக்கெட் என்ற பெயர்களில் சில மணி நேரத்துக்காக பல மடங்கு வட்டி வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச்சந்தை, காய்கறிச் சந்தைகளுக்கு வெளி மாநில வியாபாரிகள் அதிகம் பேர் வரு கின்றனர். சில மணி நேர வியாபாரத் தேவைக்காக அவர்கள் கந்துவட்டி பெறுகின்றனர். அதே பழக்கம் தற்போது பொதுமக்களிடமும் பரவிவிட்டது.

கேரளத்தில் கந்துவட்டியால் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற் கொலை செய்துகொண்ட சம்பவத் தையடுத்து கந்துவட்டி வசூலிப்பவர் களைப் பிடிக்க ‘ஆபரேஷன் குபேரா’ என்ற திட்டம் அங்கு அமலுக்கு வந்தது. இதில், 1448 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கேரள அரசு தெரிவித்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலும் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

தனிப் பிரிவு வேண்டும்

பொள்ளாச்சி பகுதியில் 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். கொடுக்கத் தாமதமாகும்போது, வட்டிக்கு விடுபவர்கள் மூன்றாம் தர நடவடிக்கைகளில் இறங்குகின் றனர். எனவே இதை முழுவதுமாகத் தடுக்க ‘ஆபரேஷன் குபேரா’ போன்ற நடவடிக்கை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

கேரளத்தைப் போன்று தமிழகத் திலும் கந்துவட்டி வசூலிப்போர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி வசூல் குறித்த புகாரை விசாரிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளை அறிவுறுத்தியுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

கேரளத்தைப் போன்று தமிழ கத்திலும் கடும் நடவடிக்கை மேற் கொண்டால் மட்டுமே இக் கொடு மைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறுகின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x