Published : 03 Jan 2021 09:37 AM
Last Updated : 03 Jan 2021 09:37 AM

கட்டுப்படியாகாத கூலி, கரோனாவால் காரைக்குடியில் ஓய்ந்துவரும் தறிச் சத்தம்: வேறு தொழிலுக்கு மாறும் நெசவாளர்கள்

காரைக்குடி

காரைக்குடியில் இயந்திரங்கள் வருகை, கட்டுப்படி யாகாத கூலி, கரோனாவால் கைத்தறி நெசவாளர்கள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

வீடு, உபயோகப் பொருட்கள் என எதிலும் கலைநயத்தை விரும்பும் நகரத்தார் ஆடை விஷ யத்திலும் விட்டு வைக்கவில்லை. கோடையில் இத மாக, பட்டுச்சேலைக்கு இணையான சேலையை நகரத்தார் பெண்கள் விரும்பினர். இதற்காகவே நெசவாளர்கள் செட்டிநாட்டு காட்டன் கண்டாங்கி சேலையைத் தயாரிக்கத் தொடங்கினர். இவர்கள் ஆரம்ப காலத்தில் பட்டு மூலம் சேலைகளைத் தயாரித்தனர். நகரத்தார் பெண்களின் கோரிக்கையை ஏற்று பருத்தி நூலில் நெசவு செய்ய ஆரம்பித்தனர். இச்சேலைகள் இந்தியாவிலேயே பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படுகின்றன.

மேலும் சிறிதும் பெரிதுமாக பட்டையான கோடு கள் (அ) கட்டங்கள் (செக்டு) நிறைந்த அவற்றின் டிசைனும் சிறப்பு தான். இந்த சேலைகளை 200 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி பகுதியில் 700-மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறியாக நெசவு செய்து வருகின்றனர்.

நகரத்தார்களுக்காக நெசவு செய்யப்பட்ட இந்தச் சேலைகள் தற்போது பிரபலமாக உள்ளது. இதனை அனைத்து சமூகப் பெண்களும் விரும்பிக் கட்டுகின்றனர். தற்போது திருமணமாகாத பெண் கள் கூட கண்டாங்கி சேலைக்கு மாறி வருகின்றனர்.
செட்டிநாட்டு சேலைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுரம், மயில், அன்னம், போன்ற பாரம்பரியமான டிசைன்களே அதிகம் இருக்கும்.

இங்கு தயாராகும் சேலைகள் பெங்களூரு, புதுடில்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.
தமிழகத்திலும் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிர பலமான கடைகளிலும் கிடைக்கும். இவர்கள் சேலைகளை கைத்தறியாக தான் தயாரிக்கின்றனர். செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு சமீ பத்தில் புவிசார் குறியீடும் கிடைத்தது.

இத்தகைய சிறப்புடைய சேலைகளைத் தயாரிக்கும் நெசவாளர்களின் நிலை பரிதா பமாக உள்ளது. இயந்திரங்களின் வருகை, கட்டுப்படியாகாத கூலி, கரோனாவால் நெச வாளர்கள் பலர் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் காரைக்குடி கணேச புரம்,வைத்திலிங்கபுரம்,சத்தியமூர்த்தி நகர், நா.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுக்கு வீடு கேட்ட தறிச் சத்தம் தற்போது ஓய்ந்து வருகிறது.

இதுகுறித்து நெசவாளர் லட்சுமி கூறியதாவது: மூன்று பேர் 2 நாட்களில் 4 சேலைகளை நெய் வோம். 4 சேலைகளுக்கு கூலியாக ரூ.1,000 தருவர். தற்போது கைத்தறி உற்பத்தியாளர்கள் கூலியை பாதியாகக் குறைத்து விட்டனர். இதனால் ஒருவருக்கு தினக்கூலியாக ரூ.125 தான் கிடைக்கிறது. கூலி குறைந்ததால் நெசவுத் தொழிலைக் கைவிட வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. இதனால் பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். நாங்கள் வழியின்றி தொடர்ந்து செய்து வருகிறோம். கைத்தறி நெசவைக் காப் பாற்ற அரசு உதவ வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x