Published : 25 Oct 2015 11:04 AM
Last Updated : 25 Oct 2015 11:04 AM

செங்கம் டிஎஸ்பி தாக்கப்பட்ட விவகாரம்: கைதானோரை விடுவிக்க இளம்பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் - காவல்துறையினர் வெளியேற கோரிக்கை

செங்கம் அருகே டிஎஸ்பியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேரை விடுதலை செய்யக்கோரி, விபத்தில் உயிரிழந்த கிளீனரின் மனைவியும் மகளும் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டம்பட்டு கிராமத்தில் வசித்தவர் லாரி கிளீனர் ராமமூர்த்தி. இவர், புதுச்சேரிக்கு கடந்த 8-ம் தேதி சென்றபோது லாரியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்ததாகக் கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி இரவு உயிரிழந்தார். லாரி மீது போதையில் படுத்திருந்தபோது தவறி விழுந்து ராமமூர்த்தி இறந்து விட்டதாக புதுச்சேரி மாநில போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ராமமூர்த்தி மரணத் தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது சடலத்துடன் செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் கடந்த 22-ம் தேதி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, தகாத வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்தவர்கள் டிஎஸ்பி மற்றும் போலீஸாரைத் தாக்கினர். இதையறிந்த எஸ்.பி. பொன்னி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.

இது குறித்து மேல்செங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 19 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 10 பேரை போலீஸார் தேடி வந்தனர். இதனால், கிராமத்தை விட்டு ஆண்கள் வெளியேறிவிட்டனர். ஒவ்வொரு வீடுகளையும் சோதனை என்ற பெய ரில் அத்துமீறி உள்ளே புகுந்து போலீஸார் தேடுதல் வேட்டை நடத்துவதாகக் கூறி, காவல்துறை யின் செயலுக்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரி ழந்த ராமமூர்த்தியின் மனைவி மணிலா(35), அவரது மகள் பூவரசி(16) ஆகியோர், தங்கள் கிராமத்தில் இருந்த செல்போன் டவர் மீது நேற்று மாலை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அவர்கள், “கைது செய்யப் பட்ட 19 பேரை விடுதலை செய்ய வேண்டும், மேலும் பலரை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும், கைது என்ற பெயரில் பெண் களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது, கிராமத்தைவிட்டு காவல் துறையினர் வெளியேற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி தகவலறிந்து செங்கம் வட்டாட்சியர் காமராஜ் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது அவர், “மேலும் யாரையும் காவல்துறை கைது செய் யாமல் இருக்க நடவடிக்கை எடுக் கப்படும், கைது செய்யப்பட்டவர் களுக்கு பிணையில் வெளியே வர உதவி செய்யப்படும்” என்று தெரிவித்தார். இதனையடுத்து, இருவரும் போராட்டத்தைக் கைவிட்டு கீழே இறங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x