Published : 05 Oct 2015 07:58 AM
Last Updated : 05 Oct 2015 07:58 AM

லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: மத்திய அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை- பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்

சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி லாரி உரிமையாளர்கள் 4-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், லாரி உரிமையாளர் சங்கங்களுடன் மத் திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடி களையும் அகற்ற வேண்டும். லாரி வாடகையில் டீடிஎஸ் பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்கு வரத்து காங்கிரஸ் சார்பில் கடந்த 1-ம் தேதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. 4-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் நீடித்தது.

தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சுங்கச்சாவடி களில் லாரி உரிமையாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். லாரிகள் வேலைநிறுத்தத்தால் வெளி மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், மருந்து, சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் ஆங் காங்கே தேங்கியுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 6.9 லட்சம் லாரிகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத லாரிகள் இயக்கப் படவில்லை. நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சேலம், கோவை, திருப்பூர், திருச்செங் கோடு உள்ளிட்ட முக்கிய நகரங் களிலும் பொருட்கள் விநியோகத் தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் செய்யும் குடோன்களில் சரக்குகள் தேங்கியுள்ளன. இதன்காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தினமும் சுமார் 1 கோடி முட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன. 4 நாட்களாக லாரிகள் இயங்காததால் சுமார் 3.50 கோடி முட்டைகள் தேக்கமடைந் துள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு லாரிகள் இயக்கப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இந்நிலையில், லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று மாலை முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

இதுதொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கோபால் நாயுடு கூறும்போது, ‘‘சுங்கச்சாவடிகளை அகற்ற வலி யுறுத்தி தொடர்ந்து 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டு நர்கள், கிளீனர்கள் உட்பட லட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ள னர். மத்திய அமைச்சர் நிதின்கட்கரி யுடன் 5-ம் தேதி (இன்று) மாலை 3 மணி அளவில் முக்கிய பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி அறிவிக்கப் படும்’’ என்றார்.

டேங்கர் லாரி மற்றும் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜனிடம் கேட்ட போது, ‘‘சுங்கச்சாவடி கட்டணத்தால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கும் பல்வேறு பிரச்சினை கள் உள்ளன. லாரி உரிமையாளர் கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், சிலிண்டர் விநியோகம் அத்தியாவசியப் பணி என்பதால், வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை’’ என்றார்.

7 சுங்கச் சாவடிகளில் லாபத்தைத் தாண்டி வசூல்

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார், ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

சுங்கச் சாவடிகளில் முதலீட்டு செலவையும் கடந்து பல ஆண்டுகளாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். முதலீட்டு செலவு மற்றும் லாபத்தைக் கடந்துவிட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த, அந்தந்த மாநில அரசுகளே ஆய்வு நடத்தி முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுபோல டெல்லி, மகாராஷ்டிரம், பிஹார், குஜராத் ஆகிய மாநிலங்களில் சில சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை தடா (விஜயநல்லூர்), மதுரவாயல் தாம்பரம் (மதுரவாயல்), தாம்பரம் செங்கல்பட்டு (பரனூர்), செங்கல்பட்டு திண்டிவனம் (ஆத்தூர்), சென்னை - பெரும்புதூர் (வானகரம்), பெரும்புதூர் வாலாஜாபேட்டை (வாலாஜாபேட்டை), வாலாஜாபேட்டை - பள்ளி கொண்டா (வேலூர் அருகில்) ஆகிய 7 சுங்கச் சாவடிகளிலும் முதலீட்டு செலவு மற்றும் லாபத்தைத் தாண்டியும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் 5-ம் தேதி (இன்று) தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x