Last Updated : 15 Dec, 2020 03:29 PM

 

Published : 15 Dec 2020 03:29 PM
Last Updated : 15 Dec 2020 03:29 PM

மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும்: கமல்ஹாசன் பேச்சு

விருதுநகர்

மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும் என்று கமல்ஹாசன் கூறினார். சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தைத் தொடங்கியுய்ள்ளார்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாகப் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மூன்றாவது நாளாக விருதுநகர் வந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் திரைப்பட நடிகருமான கமலஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டாார்.

முன்னதாக, மதுரையிலிருந்து வந்த கமல்ஹாசனுக்கு மாவட்ட சத்திரரெட்டியபட்டியில் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மூளிப்பட்டி அரண்மனை அருகே பொதுமக்களை சந்தித்தார். அப்போது, கைகூப்பி வணங்கியதோடு எதுவும் பேசாமல் கமல்ஹாசன் சென்றதால் கட்சியினரும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, சிவகாசியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

பின்னர், தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "குளத்தூர் ஆரம்பித்து தற்போது கூவமாகி விட்டது. கூவத்தை சுத்தம் படுத்துவேன் எனக் கூறியவர்கள் யாரும் அதை சரி செய்யவில்லை. மதத்தால் பிரிவினை செய்பவர்களை தமிழகம் தக்க பாடம் புகட்டும். எத்தனை தடைகள் வந்தாலும் மீறி செல்வோம், பின் வாங்க மாட்டோம்.

மக்கள் திலகம் என்பது மக்கள் கொடுத்த கௌரவம். அவர் மடியில் அமர்ந்தவன் நான். தமிழகம் சொந்தம் கொண்டாடும் மக்கள் திலகம் மடியில் யாரை அமர வைப்பது என்பது மக்களுக்குத் தெரியும். நாளைய தலைமுறை உங்களைப் போல் சீரழியக் கூடாது. ஒட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்காமல் 5 லட்சம் கேளுங்கள். நான் எதுவும் தரமாட்டேன். ஊழல் இல்லாமல், லஞ்சம் பெறாமல், அமைச்சர், அதிகாரிகள் இருந்தால் தமிழகத்தை வழி நடத்த முடியும்.

என்னை சினிமாகாரன்போல் தாய்மார்கள் பார்க்கவில்லை. வெற்றி உனக்கு எனத் தெரிவிக்கிறார்கள். எஜமானி அம்மா இறந்த பின்பு சாவிக்கு சண்டை போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னம் பெற்ற காரணம் வேறு, தற்போது வேறு நிலை உள்ளது. இரண்டு பேர் இலையில் சோறு போட்டு சாப்பிடுகிறார்கள். சிவகாசி பட்டாசு தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வேலையை நிறுத்துவது என்பது எந்த நல்ல அரசும் செய்யாது." என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x