Published : 29 Oct 2015 10:07 AM
Last Updated : 29 Oct 2015 10:07 AM

மருத்துவப் பிரதிநிதிகள் மீது பயங்கர தாக்குதல்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் மீது வழக்கு

கோவை ராம்நகர் செங்குப்தா வீதியில் தமிழ்நாடு கொங்கு இளை ஞர் பேரவையின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தையொட்டி தனியார் மருந்து விநியோக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பிரதி நிதிகள் மருந்து விநியோக நிறு வனத்துக்கு வந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் தங்களது இரு சக்கர வாகனங்களை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தினர். அப்போது கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது எனக் கூறியதால், இருதரப்பினருக் கும் இடையே பிரச்சினை ஏற்பட் டது. இதில், மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.

வாகனங்களை சேதப்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, போலீஸாருடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மருந்து விற்பனை பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.

இந்தத் தாக்குதலில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் கோவைப் புதூரைச் சேர்ந்த ராம்திலீப், சுக்ரவார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, தாராபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் பலத்த காய மடைந்து தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் ரம்யா பாரதி கூறும்போது, ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை செய்தித் தொடர்பாளர் சங்கர், மாவட்ட அமைப்பாளர் பரமசிவம், சூலூர் ஒன்றியப் பொறுப்பாளர் விவேக்குமார் ஆகியோரும், சக்திவேல், மணிகண்டன், கோபால், தினேஷ் உட்பட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

தனியரசு பதில்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு கூறும்போது, ‘திருமண நிகழ்வு ஒன்றில் இருந்ததால் பிரச்சினை குறித்து முழுமையாக அறிய முடியவில்லை.

மருத்துவப் பிரதிநிதிகளும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக விசாரித்த பின்னரே பதில் கூறமுடியும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x