Published : 20 Oct 2015 09:09 AM
Last Updated : 20 Oct 2015 09:09 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தையில் விறுவிறு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில் திறக் கப்பட்டுள்ள ஆயுதபூஜை சிறப்புச் சந்தையில் நேற்று விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோயம்பேடு ஆயுதபூஜை சிறப்புச் சந்தை கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இருப்பினும் நேற்று முதல் வியாபாரம் சூடு பிடித்துள் ளது. ஆயுதபூஜை பண்டிகை புதன்கிழமை வந்தாலும், அன்று விடுமுறை விடப்படுவதை ஒட்டி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை இன்று (செவ்வாய்க் கிழமை) பூஜை போட திட்டமிட்டுள் ளனர். அவர்கள் நேற்றே பொரி, பூ, வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட வற்றை வாங்கிச் சென்றனர்.

சிறப்புச் சந்தையில் சாமந்தி பூ முழம் ரூ.25, கதம்பம் முழம் ரூ.20, பூசணிக்காய் (சுமார் 8 கிலோ) ரூ.80, தேங்காய் ரூ.25, மாவிலை கொத்து ரூ.10, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.100, ஆப்பிள் கிலோ ரூ.100, சாத்துக்குடி ரூ.55, கொய்யா ரூ.120, ஆரஞ்சு ரூ.50, வாழைக்கன்று ஜோடி ரூ.25, தென்னை ஓலை தோரணம் ரூ.10, ஒரு வாழை இலை ரூ.2, ஒரு படி பொரி ரூ.10, ஒரு படி அவல் ரூ.120, உடைத்த கடலை ஒரு படி ரூ.120, ஒரு கரும்பு ரூ.15 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு சந்தையில் கடை வைத் திருப்போர், வழிகளை ஆக்கிரமிக் காமல் இருக்க மார்க்கெட் நிர்வாகம் சார்பில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நேற்று பிற்பகலுக்கு பிறகு, பொருட்களை வாங்க மக்கள் வருவது அதிகரிக்கத் தொடங்கியது. போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொரி வியாபாரி ஒருவர் கூறும்போது, “இன்று (திங்கள் கிழமை) தான் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் என பலர் வந்து பொரி வாங்குகின்றனர். செவ்வாய்க்கிழமை மேலும் வியா பாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு ஆயுத பூஜையின் போது தமிழக அரசியல் சூழல் சரியில்லாமல் இருந்ததால், ஆளும் கட்சியினர் மற்றும் அரசு அலுவல கங்களில் ஆயுத பூஜை கொண் டாடப்படவில்லை. அதனால் விற்பனை மந்தமாக இருந்தது” என்றார்.

பெரும்புதூரில் உள்ள பிரபல கார் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கூறும்போது, “எங்கள் தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட ரூ.1 லட்சம் மதிப்பில் பொரி, பூ, பழங்களை ஒரே இடத்தில் வாங்கியுள்ளோம். எங்களுக்கு இதுபோன்ற சிறப்புச் சந்தை வசதியாக உள்ளது” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x