Published : 04 Oct 2020 12:02 PM
Last Updated : 04 Oct 2020 12:02 PM

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள் வழங்கப் பட்டுள்ளதால், கடந்த மாதம் முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அரசு அலுவலகங்களுக்கு பணி மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் -பல்லடம் சாலையிலுள்ள ஆட்சியர்அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரியின் ஓட்டுநர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் ஓர் அதிகாரி என இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

பொதுமக்களின் வருகையும் அதிகமாக உள்ளதால், அரசு ஊழியர்களும் அச்சமடைந்துள்ள னர். ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம்பயன்படுத்தும் அரசு அலுவலகங்களில் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்துவதுடன், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x