Published : 03 Sep 2015 10:41 AM
Last Updated : 03 Sep 2015 10:41 AM

ஆதரவற்ற ஜீவன்களை இசையால் மகிழ்விக்கும் ‘யாம்’ இளைஞர்கள்

மதுரையைச் சுற்றியுள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் மாற்றுத் திறனாளிகள் விடுதிகளிலும் கல்லூரி மாணவர்களின் ‘யாம்’குழு இலவசமாக இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆதரவற்ற ஜீவன்களை ஆனந்தப்படுத்தி வருகிறது.

ஷாஜகான், 5 வருடங்களுக்கு முன்பு, மதுரை பள்ளிகளில் பகுதி நேர இசை ஆசிரியராக இருந்தவர். இப்போது தனியார் பண்பலையில் நிகழ்ச்சி தயாரிப்பாளர். 3 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மாணவர்களை வைத்து இவர் உருவாக்கியது தான் ‘யாம்’ (YAAM - Young Artist Association Of Musicians) என்ற அமைப்பு. எதற்காக இந்த அமைப்பை உருவாக்கினோம் என்பதை அவரே விவரிக்கிறார்.

“ஆதரவற்றோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிக்கரம் நீட்ட ஏராளமானவர்கள் இருக்கிறார் கள். அவர்களால் பணத்தைக் கொடுக்க முடியும். இனிமையான இசையையோ கலை நிகழ்ச் சியையோ தர முடியாது. எங்களி டம் பணமில்லை. ஆனால், திறமை இருக்கிறது. அந்தத் திறமையின் பலனை இயலாத அந்த ஜீவன் களுக்கு தானம் கொடுக்கத்தான் ‘யாம்’ தொடங்கினோம்.

நான் இசை ஆசிரியராக இருந்த போது, இசையில் திறமையான மாணவர்களை அடையாளம் கண் டிருக்கிறேன். ஆசிரியர் பணியை விட்டு வந்தபிறகும் அவர்களுட னான எனது நட்பு தொடர்ந்தது. அவர்களில் ஆறேழு பேரை வைத் துத்தான் ‘யாம்’ தொடங்கினோம். இப்போது, 15 பெண்கள் உட்பட 30 பேர் யாமில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இப்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாதத்தில் ஒரு நாள் மதுரையில் ஏதாவதொரு இல்லத்தில் எங்க ளது கலை நிகழ்ச்சி இருக்கும். இசை மாத்திரமின்றி பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் உண்டு. குறைந்தது 3 மணி நேரம், ஆதரவற்ற அந்த ஜீவன்களை மகிழ்வித்து விட்டு வருவோம். ஆதரவற்றோர் இல்லம் என்பதற் காக நாங்கள் ஏனோதானோ என்று நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. மிகவும் தரமான ஒரு நிகழ்ச் சியைத்தான் வழங்குவோம்.

மதுரை பாலமந்திரம் சேவா ஆசிரமம், ராஜாஜி முதியோர் இல்லம், மேலூரில் சிருஷ்டி மனநல காப்பகத்திலும், திருப்பரங்குன்றம் ‘விடியல்’ சிறுவர்கள் இல்லம், மதுரை ரோட்டரி கிளப், அழகர் கோவில் மகாத்மா பள்ளியிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம்.

இசை நிகழ்ச்சிக்கு ஆடியோ சிஸ்டம் அமைக்க ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், எங்களுக்கு ஆடியோ சிஸ்டம் அமைப்பவர், ‘இவர்களுக்கு என்னு டைய பங்களிப்பாக இருக்கட்டும்’ என்று சொல்லி ரூபாய் ரெண்டாயி ரத்தை மட்டும் வாங்கிக் கொள்வார். அதையும் ‘யாம்’ மாணவர்கள் தங்களது பாக்கெட் மணியிலிருந்தே கொடுத்துவிடுவார்கள். 30 பேர் குழுவில் இருந்தாலும் சுழற்சி முறையில் ஒரு நிகழ்ச்சிக்கு 10 பேர் மட்டும்தான் போவார்கள்.

மாணவர்களின் நலன் கருதி..

‘யாம்’ மாணவர்களுக்கு ஞாயிறு தோறும் எனது வீட்டில் இசைப் பயிற்சி நடக்கும். கூடவே அவர் களுக்கான தன்னம்பிக்கை மற்றும் அணுகுமுறை (Attitude) குறித்த வகுப்புகளும் நடக்கும். வீட்டில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், அம்மாவுக்கு எப்படி உறுதுணை யாக இருக்க வேண்டும், எந்த வகை உணவுகளை உண்ண வேண் டும் என்பவை குறித்தெல்லாம் அவர்களுக்கு அறிவுறுத்து வேன்.

நான் சொல்கிறபடி வீட்டில் அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதற்கு ரிப்போர்ட் கார்டு இருக்கிறது. ஞாயிறு வகுப்புக்கு வரும்போது அம்மாவிடம் அந்தக் கார்டில் கட்டாயம் கையெழுத்து வாங்கி வரவேண்டும்.

இப்படிப்பட்ட மாணவர்களைத் தான் நாங்கள் யாமில் வைத்தி ருக்கிறோம். ஆதரவற்ற ஜீவன் களை தங்களது திறமையால் மகிழ்விப்பதுடன் பயிற்சி வகுப்பு களில் தங்களையும் அந்த மாணவர் கள் பண்படுத்திக் கொள்கிறார்கள்’’ என்கிறார் ஷாஜகான்.

விரைவில், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பு களில் கட்டணத்துக்காக இசை நிகழ்ச்சியை நடத்தி, அந்த வருமா னத்தை ஆதரவற்றோர் இல்லங் களுக்கே நன்கொடையாக வழங்கிட தீர்மானித்திருக்கிறார்கள் ‘யாம்’ இளைஞர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x