Last Updated : 14 Sep, 2015 10:30 AM

 

Published : 14 Sep 2015 10:30 AM
Last Updated : 14 Sep 2015 10:30 AM

தென்னை, பனை மர கழிவுகளிலிருந்து விநாயகர் சிற்பங்கள் உருவாக்கும் மாணவர்கள்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் காக தென்னை, பனை மர கழிவுகளி லிருந்து விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர் புதுச்சேரி கிராமப் பகுதியிலுள்ள சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.

தென்னை, பனை மரங்களி லிருந்து விழுந்து குப்பையில் சேரும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமைபடைத்தவர்கள் புதுச்சேரி சேலியமேடு வாணி தாசன் அரசு பள்ளி மாணவர்கள். நுண்கலை ஆசிரிய ரான உமாபதி வழிகாட்டுதல்படி பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுக்கின்றனர்.

தற்போது விநாயகர் சதுர்த் தியையொட்டி தென்னை, பனை மரங்களில் இருந்து விழும் தென்னை குருத்து, பனை ஓலை என சாதாரண பொருட்களில் இருந்து கலைநயமிக்க விநாயகர் சிலைகளை முதல்முறையாக செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆசிரியர் உமாபதி 'தி இந்து'விடம் கூறிய தாவது:

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மையப்படுத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் வடிவங்களை 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் உருவாக்குகின்றனர். மாணவ, மாணவிகளான தமிழ் செல்வன், சீனிவாசன், ராகேஷ், கவுதம், பாலசந்தர், ஜோக்கியா, தீபன்ராஜ் ஆகியோர் ஏராளமான விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததுடன் செயற்கை வண்ணங்கள் ஏதும் சேர்க்கவில்லை. மாணவர்கள் கற்பனை திறனுடன் கூடிய வகை யில் விநாயகரை வடிவமைத்துள்ளனர். குறிப்பாக ரோபா விநாய கர், மத்தளம் தட்டும் விநாயகர், படுத்தநிலையிலுள்ள விநாயகர் என பல புது வடிவங்களில் விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

விநாயகரின் தும்பிக்கை, தந்தம் ஆகிய அனைத்தும் தென்னை, பனை மரங்களில் இருந்து கீழே விழுந்த பொருட்களை கொண்டே வடிவமைத்துள்ளனர்.அதிகளவாக 4 அடி உயரம் வரை விநாயகரை வடிவமைத் துள்ளனர். எங்கள் குழந்தைகள் உருவாக்கியதுதான் முழுக்க முழுக்க இயற்கை விநாயகர் என்கிறார் பெருமிதத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x