Published : 09 Sep 2020 08:40 AM
Last Updated : 09 Sep 2020 08:40 AM

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு கரோனா தடுப்பு குறித்து விளக்கினார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

வழக்கமாக மாநிலத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஆளுநருக்கு மாதம்தோறும் அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும்.

தற்போதைய கரோனா சூழலில் முதல்வர் பழனிசாமி கடந்த 4 மாதங்களாக ஆளுநரை நேரில் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கையையும் அளித்து வந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்றும்ஆளுநரை முதல்வர் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய கரோனா பாதிப்பு நிலை, இ-பாஸ் ரத்து, பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி என கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கைகளை முதல்வர் அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர்வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இதுதவிர, மத்திய அரசின்புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இதுபற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x