ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு கரோனா தடுப்பு குறித்து விளக்கினார்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.
Updated on
1 min read

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

வழக்கமாக மாநிலத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஆளுநருக்கு மாதம்தோறும் அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும்.

தற்போதைய கரோனா சூழலில் முதல்வர் பழனிசாமி கடந்த 4 மாதங்களாக ஆளுநரை நேரில் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கையையும் அளித்து வந்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்றும்ஆளுநரை முதல்வர் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய கரோனா பாதிப்பு நிலை, இ-பாஸ் ரத்து, பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி என கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கைகளை முதல்வர் அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர்வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இதுதவிர, மத்திய அரசின்புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இதுபற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in