Published : 21 Aug 2020 06:58 AM
Last Updated : 21 Aug 2020 06:58 AM

சந்திரயான்-2 விண்கலம் ஓராண்டில் நிலவை 4,400 முறை சுற்றியுள்ளதாக இஸ்ரோ தகவல்

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஓராண்டில் 4,400 முறை நிலவை சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன்-2 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது.விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு நேற்றுடன்ஓராண்டு நிறைவு பெற்றது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கலன், அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், 3டி கேமிராக்கள் உட்பட 8 விதமான ஆய்வு சாதனங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஓராண்டில் 4,400-க்கும் மேற்பட்டதடவைகள் நிலவைச் சுற்றி வந்துள்ளன. ஆர்பிட்டரின் ஆய்வுக்காலம்ஓராண்டு வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எரிபொருள்அதிக அளவு உள்ளதால் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டர் ஆய்வுப் பணியை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x